இயக்கமா ? இஸ்லாமா ?

இயக்கமா ? இஸ்லாமா ?
நீங்களே முடிவெடுங்கள்! 

துவங்கி விட்டது சகோதர யுத்தம்!

கொடிக்கும் பெயருக்கும் 
கோர்ட்டில் வழக்கு!

பரஸ்பரம் குற்றச்சாட்டு !

பொதுகூட்ட எதிர்ப்பு !
போஸ்டர் கிழிப்பு  ! 

முகநூளில் முகம்சுழிக்க
வைக்கும் பதிவுகள்!

சமூக வலைத்தளங்களில்  
சகிப்பின்மை  பதிவுகள் ! 

 ஒருவருக்கொருவர் 
முனாஃ பிக்  ஃ பத்வா !

நேற்றுவரை தியாகி 
இன்று துரோகி!

நேற்றுவரை நேர்மையாளர் 
இன்று நேர்மையற்றவர் ! 

மாட்டுக் கறி உரிமைக்காக 
போராட வேண்டிய நாம் 
ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி 
மனிதக்கறி தின்னலாமா ? 

சங் பரிவாருக்கு எதிராக 
பயன்படவேண்டிய சக்தியை 
சகோதரச் சண்டையில் 
நாம் வீணாக்கலாமா ? 

சமுதாயத்தின் உரிமைகளுக்காக 
நீதிமன்றம் செல்லவேண்டிய நாம் 
சகோதர சண்டைகளுக்காக 
நீதிமன்றம் செல்லலாமா ?

சூழ்ந்து நிற்கும் அபாயத்தை 
சேர்ந்து நின்று எதிர்க்க வேண்டிய 
நாம் பிரிந்து நின்று போரிடலாமா ?

இஸ்லாத்துக்கு வக்கீலாக இருந்து 
வாதிடுவதை விட்டு 
இயக்கத்துக்கு வக்கீல்களாக 
நின்று வாதிடலாமா ? 

நேற்றுவரை எதிரிகளாக இருந்தவர்களை 
 சகோதரர்களாக்கியது  இஸ்லாம்  !

நேற்றுவரை சகோதரர்களாக இருந்தவர்களை 
எதிரிகளாக்கியது இயக்கம் !

இஸ்லாமிய நெறிகளை  விட 
இயக்க வெறி மிகைக்க வேண்டாம் ! 

இது பட்டுத் திருந்தியவனின் 
பணிவான வேண்டுகோள் !
விட்டுக் கொடுங்கள் ! அல்லது 
விட்டு விலகுங்கள் !
முட்டிக் கொள்வதில் 
எந்த நன்மையையும் இல்லை !

இறைவன் கொடுக்க நினைப்பதை 
யாரும் தடுக்க முடியாது ! 

இறைவன் தடுக்க நினைப்பதை 
யாரும் கொடுக்க முடியாது!  

இயக்கமா ? இஸ்லாமா ?
நீங்களே முடிவெடுங்கள்! 

 நிதானமாக சிந்திப்போம்!
நாளை இறைவனை  சந்திப்போம்!

-செங்கிஸ்கான்

நான் வேலைக்கு போறேன்......

நான் வேலைக்கு போறேன்…

என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!”

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்…

நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.

நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா… அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

ம்… காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை… என ஓடும் பெண், ‘வீட்டுல சும்மாதானே இருக்கா… வேலையே செய்யாம’ என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

”நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?’ என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

”ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலுமாய் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் ‘நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?’ என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

– இது வாட்ஸ்ஆப் மூலமாக பரவிக் கொண்டிருக்கும் நெஞ்சைத் தொடும் ஒரு பதிவு.

Dedicate To All Women's

ஏர்டெலின் புதிய ஆபர் ஆபத்தாகுமா...?

இந்த ஏர்டெல் புதுசு புதுசா ப்ளான் அறிவிக்கிறாங்க. ராத்திரி 12 மணிலேருந்து காலைல 6 மணி வரைக்கும் நெட் யூஸ் செஞ்சா சிலவாகும் டேட்டாவில் பாதியை நம்ம அக்கவுண்ட்லேயே திரும்ப வரவு வைக்கறாங்களாம். அப்புறம் நம்மகிட்ட இருக்கற  நெட் டேட்டாவை நம்ம யாருக்காவது ஷேர் பண்ணிக்கலாமாம். ப்ளானெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதுக்கு பின்னாடி என்ன உள்குத்து வச்சிருக்கானுகன்னுதான் தெரியல. ஏன்னா இந்த நெட்வொர்க்காரனுக எல்லாம் மாட்டின் கொம்பில் பால் கறக்குறவனுகளா இருந்தா இந்த ஏர்டெல் காரங்க மட்டும்  வாலிலே பால் கறக்குறவனுக. அதான் கொஞ்சம் உதறலா இருக்கு. 

   


நன்றி: ரஹிம்கஸாலி

துபாயில் தஞ்சை பெண்ணுக்கு.....

தஞ்சாவூரை சேர்ந்த 55 வயதாகும் திருமதி. சாந்தி ராபின் அம்மையார் துபாய் அரசின் சாலை மற்றும் போக்குவரத்து துறையிடமிருந்து 50கிராம் தங்கத்தை பரிசாக பெற்றிருக்கிறார்.
ஊரிலிருக்கும் தனது மூன்று பிள்ளைகளின் வாழ்க்கைக்காக துபாயில் 22 வருடங்களாக வீட்டு வேலை செய்து வந்த இவர் போக்குவரத்திற்காக துபாய் மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
பொது போக்குவரத்து சாதனங்களை அனைவரும் பயன்படுத்த ஊக்கமளிப்பதற்காக சாந்தி அம்மாவிற்கு 50 கிராம் தங்கத்தை பரிசளித்து உற்சாகப்படுத்தியிருக்கிறது Dubai RTA (Roads and Transport Authority)

இதை கடவுள் தனக்கு கொடுத்த பரிசாக நினைத்து மகிழ்வதாக தன் நெஞ்சார்ந்த நன்றியை RTAவிற்கு தெரிவித்துள்ளார் இந்த உழைப்பாளி.

நானும் இவரது உழைப்பை மதிக்கிறேன்! மகிழ்கிறேன்!


மாட்டுக்கறி சாப்பிட்டால் தலையை வெட்டுவோம்

மாட்டுக்கறி சாப்பிட்டால் தலையை வெட்டுவோம்- கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பா.ஜ.க. கொலை மிரட்டல்

# கொலை மிரட்டல் விடுத்தவர் பெயர் சன்னபசப்பா. அதனால் இப்போ மீடியாக்கள் பட்டும் படாமலும் செய்தி சொல்லுது.

ஒருவேளை கொலை மிரட்டல் விடுத்தவர் பெயருடன் கான்,அப்துல்,முகமது,அஹமது என எதாவது இருந்திருந்தால் இந்நேரம் 'முதலமைச்சருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்' என தலைப்பு செய்தியில் போட்டிருப்பாங்க.

முதலமைச்சர் தலையை எடுப்போம் என பகிரங்கமா பேசுறாங்கன்னா இவங்க பின்னனியில் எத்தனை பலம் வாய்ந்த சக்திகள் இருக்கும்?

நன்றி: நம்பிக்கைராஜ்

மதத்தின் ஒற்றுமை

நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை இருக்கட்டும்